பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!
Thursday, June 13th, 2019
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது.
திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர்.
இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து முறைப்பாடுகள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
Related posts:
சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை!
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் ...
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் - நிதி இராஜா...
|
|
|


