பெண்டகன், பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அதிகாரி இராஜினாமா!
Tuesday, January 8th, 2019
அமெரிக்க பெண்டகன், பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அதிகாரி கெவின் ஸ்வீனி தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீள தாயகத்திற்கு அழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குறித்த பதவியை வகித்த அவர், தனியார் துறையில் இணைந்து பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், தமது பதவி விலகல் கடிதத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து எந்தக் கருத்தினையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை.
அண்மைக் காலமாக அமெரிக்க அரச நிர்வாகத்தின் உயர் பதவிகளில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்ச்சியாக பதவி விலகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென மாயமான அல்ஜீரியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது!
பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது!
அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
|
|
|


