பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை !

Tuesday, September 12th, 2017

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையை சீனா தடை செய்துள்ளது. இதனையடுத்து, எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காற்றில் காபனீரொட்சைட் (கார்பன்-டை-ஆக்சைடு) அதிகளவில் கலப்பதால் மாசு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் உருவாகியுள்ளது.

இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.

கார்பனை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் இடம்பெற்றுள்ளது. அங்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் தடை செய்யப்படவுள்ளன.

உலகில் அதிகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவும் இடம்பிடித்துள்ளது.

தற்போது அவற்றை தடை செய்வதன் மூலம் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு எலக்ட்ரிக் கார்கள் உள்ளிட்ட வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடந்த ஜூலை மாதமே இத்தகைய வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையை 2040 ஆம் ஆண்டுக்குள் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளன.

Related posts: