பெஞ்சமின் நெதன்யாஹ_ மீண்டும் வெற்றி!
Wednesday, March 24th, 2021
இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹ_ வெற்றி பெற்றுள்ளார்.
4ஆவது முறையாக இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாஹ_ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
இதுகுறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நெதன்யாஹ_, தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசி; பொறுப்பான நடவடிக்கையை எடுத்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்போம் என கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலின் அனைத்து குடிமக்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இம்முறை ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி
அ.தி.மு.க. உரிமை ஓ.பி.எஸ் வசம்!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!
|
|
|


