இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டு!
Monday, December 11th, 2023
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது, இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில் நடந்துகொள்ளவில்லை, எந்த நாட்டிற்கும் உதவவில்லை.
இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது
இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன. கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும் கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
உருவாகின்ற கடல்சார் சவால்களிற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|
|


