புத்த பிரசங்கத்தின் ஒலிபரப்பை நிறுத்தியவருக்கு சிறைதண்டனை!
Friday, October 7th, 2016
மியன்மாரில், புத்த பிரசங்கத்தை ஒலிபரப்பிக் கொண்டிருந்த ஒலிபெருக்கியை நிறுத்தியதால், நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கடுங்காவல் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
க்லாஸ் ஹெடமா என்னும் அந்நபர், பின்னிரவில் நடைபெற்ற ஒலிபரப்பு தனது தூக்கத்திற்கு தொந்தரவாக இருந்ததால் அதை நிறுத்திவிட்டார். அந்த 31 வயது நபர், மத சேவை நடந்து கொண்டிருப்பது தனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்; தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது அவர் அழுது விட்டார்.
மியன்மாரில் புத்த மத நிகழ்ச்சிகளைப் பாதுகாக்கும் கடுமையான சட்டங்களால் வெளிநாட்டினர் பலர் சமீப ஆண்டுகளில் பிரச்சனைக்குள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை!
போலாந்தின் புதிய பிரதமராக மேத்யூஸ் !
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் - 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல...
|
|
|


