புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜேர்மனி தயார்!

Thursday, August 11th, 2016

ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமியவாத தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் தாமஸ் டி மெய்ஸிரி புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளார்.

குற்றவாளிகளை விரைந்து நாடு கடத்துதல் மற்றும் வீடியோ கண்காணிப்பு முறையை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை குடியுரிமைக்கு தடை வழங்கக் கோரியும், தேசியளவில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் அங்கி அணிய தடை விதிக்க வேண்டியும் உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியேறிகள் என்ற போர்வையில் ஜெர்மனுக்குள் ஐ.எஸ் அமைப்பினர் அனுப்பி வரும் குழுக்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை தங்களுடைய அதிகாரிகள் விசாரித்து வருவதாக அவர் தெர்வித்துள்ளார்.

Related posts: