புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பிரான்ஸ் அனுமதி!
 Thursday, October 5th, 2017
        
                    Thursday, October 5th, 2017
            பிரான்சில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கீழவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, இது சுமார் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருக்கும் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.அவசரகால ஏற்பாடுகளின் கீழ் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த பல நடவடிக்கைகள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீதித்துறையின் அனுமதியின்றி சுலபமாக வீடுகளில் சோதனையிடுவது மற்றும் தங்களுடைய சொந்த நகரங்களிலே தனி நபர்களை தடுப்புக்காவலில் வைப்பது ஆகியன இதில் அடங்கும்.பிரான்ஸில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், மனித உரிமை குழுக்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.வருகிற நவம்பர் 1ஆம் திகதியுடன் அவசரகால நிலை முடிவுக்கு வரும் நிலையில், கீழவையால் ஏற்றக்கொள்ளப்பட்ட மசோதா சட்டமாக இயற்றப்படும் என தெரிகிறது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        