புதிய அரசை உருவாக்குங்கள் – லெபனானிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி கோரிக்கை!

லெபனானில் புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தை அடுத்து ஒரே மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் பிரெஞ்ச் ஜனாதிபதி லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த மாதத்தின் முதற்பகுதியில் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டே அவர் அங்கு சென்றுள்ளார்.
லெபனான் இராஜதந்திரி முஸ்தபா அதீப் அந்நாட்டின் பிரதமராக பெயரிடப்பட்ட சில மணித்தியாலங்களில் மெக்ரோன் அங்கு சென்றிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்று 2 நாட்களில் லெபனான் சென்றிருந்த மெக்ரோன் லெபனானின் பல தசாப்தங்களாக தொடரும் அரசியல் தளம்பல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
"சோ" மருத்துவமனையில்!
பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் எச்சம்!
சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!
|
|