பிலிப்பைன்ஸ் வெள்ளம், மண்சரிவினால் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!
Thursday, December 29th, 2022
பிலிப்பைன்ஸில் தென்பகுதி தீவொன்றில் வெள்ளம், மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
மின்டானாவோ தீவில், நத்தார் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் மழைக்கு மத்தியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் 33 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் இருபதுக்கு அதிகமானோரை காணவில்லை எனவும் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளதுடன், 5000 ஹெக்டேயருக்கு அதிகமான பயிர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸின் தேசிய அனர்த்த முகவரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றிய இராணுவ யோசனையை பிரித்தானியா ஏற்காது!
அமெரிக்கா மீது அணுகுண்டு வீச வடகொரியா தயார்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!
இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக...
|
|
|


