அமெரிக்கா மீது அணுகுண்டு வீச வடகொரியா தயார்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!

Monday, November 27th, 2017

அமெரிக்கா மீது வடகொரியா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபை மூலம் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. வடகொரியா- அமெரிக்கா இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. சோதனை என்ற பெயரில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசி அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மீது வடகொரியா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளை குறி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்துக்குள் வரும் சில நாடுகளும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியிருப்புகள் மிகுந்த பகுதிகளை வடகொரியா குறி வைத்து இருப்பதாகவும், தாக்குதல் நடத்தினால் கடும் சேதம் ஏற்படும் என்றும், ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. அவற்றில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன், ஜப்பானில் மக்கள் தொகை மிகுந்த நகரங்கள் அடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

Related posts: