பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவுள்ளாரா ரொட்ரிகோ?

Friday, May 12th, 2017

பிலிப்பைன்ஸில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் உள்துறை அமைச்சராக இராணுவத் தளபதி எட்வர்டோ அனோவை நியமித்த நிலையிலேயே பிலிப்பைன்ஸ் அதிபர் பகிரங்க மேடையில் வைத்து நகைச்சுவையாக தனது அரசு இராணுவ ஆட்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

பிலிப்பைன்ஸின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ரோய் சிமாடுவை கடந்தவாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சராக நியமித்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ இன்று தற்போதைய இராணுவத் தளபதியை உள்துறை அமைச்சராக நிமித்துள்ளார்.

இதற்கமைய ஒரு வாரகாலத்திற்குள் இராணுவத்தளபதிகள் இருவரை  பிலிப்பைன்ஸ் அமைச்சரவையில் ரொட்ரிகோ இணைத்துக்கொண்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு யூலை மாதம் பதவிக்கு வந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ போதைப்பொருளை ஒழிக்கும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் போதைப்பொருள் ஒழிப்புப் படைப் பிரிவுதனிப்பட்ட பகைகளுக்காகவும் பலலை படுகொலை செய்தமை தெரியவந்ததை அடுத்து கறித்த யுத்தத்தை கைவிட்டிருந்தார்.

எனினும் ரொட்ரிகோ மீது கடும் விமர்சனங்கள் தொடர்ந்தும் நீடித்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில் அமைச்சரவைக்கு இராணுவத் தளபதிகளை நியமிக்கும் செயற்பாட்டிலும் ரொட்ரிகோ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Related posts: