பிறப்பு விகித சரிவின் எதிரொலி: ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கை!

Tuesday, February 28th, 2017

 

ஸ்பெயினில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ள நிலையில், இதனை சீர் செய்வதற்கு கொள்கை விளக்க தூதுவர் ஒருவரை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது

அதன்படி மக்கள் தொகை அதிகரிப்பதன் தேவையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு மக்கள் தொகை நிபுணரான Edelmira Barreira என்பவரை கொள்கை விளக்க தூதுவராக ஸ்பெயின் அரசு நியமித்துள்ளது

ஸ்பெயின் நாட்டு பெண்கள் தங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தெரிவித்திருந்த போதும், இந்த கூற்றில் தற்போது வரை சிறிதளவிலேனும் முன்னேற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ல் இருந்து 49 வயது வரையான பெண்களில் சராசரியாக 1.3 குழந்தைகள் என்ற விகிதமாகவே இருந்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தை விடவும் குறைவு என கூறப்படுகிறது.

Untitled-1 copy

Related posts: