பிறந்த நாள் வாழ்த்துக்கு பிடல் காஸ்ட்ரோ நன்றி!
Sunday, August 14th, 2016
தனத 90அவது பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த ஆதரவாளர்களுக்கு கியூபாவின் புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் சீனாவையும், ரஷியாவையம் புகழ்ந்தள்ள அவர் தனது இளமை காலத்தை பற்றிய நினைவுகளை அதிகமாக எழுதி, அதிபர் ஒபாமாவை விமர்சித்திருக்கிறார்.
தன்னுடைய சகோதரர் ராவுலிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முன்பு, பிடல் காஸ்ட்ரோ 50 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். அதிபர் ராவுல் பொருளாதார கட்டுபாடுகளை தளர்த்தி அமெரிக்காவுடன் ராஜீய உறவுகளை மீட்டுள்ளார். பிடல் காஸ்ட்ரோ பல மாதங்களாக பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயிரமாவது ஆண்டு நிகழ்வில் ரஷிய அதிபர் பங்கேற்பு!
‘தவறான பாதையில் நாட்டை வழிநடத்தமாட்டேன் - பிரதமர் மோடி
பாரபட்சங்கள் வேண்டாம் : இந்தியப் பிரதமர் மோடி!
|
|
|


