பிறந்தநாளுக்கு விடப்பட்ட விடுமுறையில் குண்டுவெடிப்பு!
Friday, August 12th, 2016
தாய்லாந்தில் ராணி சிரிகிட்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பொதுவிடுமுறை விடப்பட்டது.இதனையொட்டி பொதுமக்கள் கடற்கரையை ஒட்டிய ஹுவா ஹின் என்ற பகுதியில் உள்ள உல்லாச பங்களாவில் தங்கள் பொழுதை கழித்துள்ளனர்.
அப்போது இரவு 09.50 மற்றும் 10.20 என 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உள்ளூர் பிரச்சனை காரணமாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என்று அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சிரிய யுத்த நிறுத்தத்திற்கு ரஷ்யா மற்றும் துருக்கி இணக்கம்!
கொவிட்-19 : அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம்!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளதாக த...
|
|
|


