பிரேசில் சிறை கலவம்: 56 பேர் கொடூரக் கொலை!
Wednesday, January 4th, 2017
பிரேசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சில சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், எரிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.
அமேசோனாஸ் மாநில தலைநகரான மானவுஸில் இருக்கும் நெரிசல் மிக்க சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான கலவரம் 17 மணி நேரம் நீடித்தது.
கலகக்காரர்கள் 12 சிறைக்காவலர்களை பிணைக்கைதியாக பிடித்ததோடு பல டசின் கைதிகள் தப்பிச் சென்றனர். பிரேசிலில் பல ஆண்டுகளில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட சிறைக் வலவராமாக இது இருந்தது.
சிறைச்சாலையை கட்டுப்படுத்துவது, போதை கடத்தல் வழிகளை கைப்பற்றுவது குறித்து இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலே கலவரமாக வெடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பழைய இந்திய நாணயத்தாள்கள் மாற்ற ஜூன் மாதம் 30-ஆம் திகதிவரை அவகாசம்!
அமெரிக்காவில் பாரிய விமான விபத்து!
கஞ்சா கடத்தல் குற்றம் - சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜூ சுப்பையா!
|
|
|


