பிரெஸல்ஸ் தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது
Saturday, March 26th, 2016
கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரெஸல்ஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜிய காவல்துறையினர் மேலும் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரெஸல்ஸின் வடக்கு ஷயெர்பீக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் வைத்திருந்த வெடிபொருள் பையையும் காவல்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (25) பாரீஸில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என உள்ளூர் மேயர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக பிரெஸல்ஸில் நடத்தப்பட்ட சோதனைகளில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஜெர்மனியில் 2 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
Related posts:
பாகிஸ்தானில் ரயில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி!
பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகினார்
வடகொரியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்
|
|
|


