பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா!

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது தொடர்பில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸூக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலத்திற்கு முன்பாகவிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிக்களுக்கு மத்தியிலேயே தாம் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மால் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரய்ஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தென்கொரிய தூதரகத்தில் வட கொரியர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு!
ஐரோப்பிய சந்தைகளில் பிரித்தானிய நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு பெறப்படும் - தெரீசா மே!
|
|