ஐரோப்பிய சந்தைகளில் பிரித்தானிய நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு பெறப்படும் – தெரீசா மே!  

Thursday, October 13th, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரித்தானிய நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரித்தானிய  பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டனின் குடிமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கான சரியான உறவைவத் தான் அது வேண்டுகிறது என்றார்.

பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்புரிமை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்பார்க்கவில்லை என்பதற்குத் தெளிவான சமிக்ஞைகளை அவரின் கருத்துக்கள் தெரிவிப்பதாக உள்ளது என்று பி பிசி யின் அரசியல் பிரிவு துணை ஆசிரியர் கூறுகிறார்.

_91889504_gettyimages-612813804

Related posts: