பிரித்தானிய படைப் பயிற்றுநர்கள் ஜோர்தானுக்கு!

Tuesday, April 4th, 2017

ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் படைவீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கென பிரித்தானியாவின் இராணுவ பயிற்றுவிப்பாளர்கள் ஜோர்தானுக்கு அனுப்பட்டுள்ளனர்.

ஜோர்தான் தலைநகர் அமானுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் தெரேசா மே கடும்போக்குவாதத்தை சமாளிப்பதில் பிரித்தானியா மற்றும் ஜோர்தானுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் செயற்பாடுகள் குறித்த திட்டங்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வகுக்கவுள்ளார்.

சிரியாவில் நீடிக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள அகதிகள் ஜோர்தானில் அடைக்கலம் கோரியுள்ள நிலையில், அந்த நாட்டுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மூன்று நாள் விஜயமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் ஜோர்தானில் வைத்து பிரித்தானிய இராணுவப் பயிற்றுவிப்பாளர்களால் வழங்கப்படும் பயிற்சிகள், ஜோர்தான் விமானப் படையினருக்கு ஐ.எஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல் வல்லமையை அதிகரிப்பதற்கு உதவிபுரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: