அச்சத்துடனான மனநிலையில் அவுஸ்திரேலிய அகதிகள்!

Friday, April 6th, 2018

 

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நீண்டகாலமாக அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடனான மனநிலையில் இருப்பதாகஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. அதன் சிரேஷ்ட உறுப்பினர் இந்திரிக்கா ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமது 25 வருட சேவையில் பசுபிக் தீவுகளான நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமையைப் போன்று மோசமான நிலைமையை தாம் பார்த்ததில்லை என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது. இந்த இடங்களில் சுமார் 3000க்கும் அதிகமான இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியாபோன்ற நாடுகளின் ஆண்கள், பெண்கள், சிறார்கள் தடுப்பில் இருக்கின்றனர்.

அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: