பிரித்தானியா பயணமானார் டொனால்ட் ட்ரம்ப்!
Monday, June 3rd, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சில முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய மகாராணியை சந்திக்கவுள்ள ட்ரம்ப், அவருடன் பிரத்தியேக பகல் போசனத்தில் கலந்து கொள்வதுடன், இளவரசர் சாள்ஸ் உடன் தேநீர் விருந்திலும்; கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பக்கிங்ஹாம் மாளிகையில் ராஜதந்திரிகர்களுடனான விருந்து உபசாரத்திலும் ட்ரம்ப் பங்கு கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
செல்பி மோகத்தால் உயிரிழந்த வீராங்கனை!
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கிறது போயஸ் கார்டன்!
பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – ஆப்கானில் 50 இக்கும் அதிகமானோர் பலி!
|
|
|


