பிரித்தானியாவில் வானிலை எச்சரிக்கை!

Monday, March 28th, 2016

பிரித்தானியாவில் அதிக காற்றழுத்தம் நிலவி வருவதால் தரையிரங்கும் விமானங்கள் திருப்பிடவிடப் பட்டுள்ளதோடு சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பிரித்தானியாவில் 100mph வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதால், Gatwick விமான நிலையத்தில் தரையிரங்க வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. South West, Isle of Portland, Berry Head and Thorney Island ஆகிய பகுதிகளில் 70mph வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இங்கிலாந்தின் Hampshire , Sussex, Surrey, மற்றும் Kent போன்ற நகரங்களில் மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பலத்த காற்று காரணமாக, இங்கிலாந்தின் Dartford ஆற்றை கடக்கும் பாதை மற்றும் M48 Severn பாலத்தின் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

சாலைகளை கடக்கும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும், மேலும் உங்கள் பயணத்தின் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை கவனத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வட கிழக்கு பகுதியில் இருந்து பலத்த மழை வேல்ஸ் பகுதியினை நோக்கி நகர்துள்ளதால் இங்கு வீசும் பலத்த காற்று காரணமாக மரங்களின் கிளைகள் உடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்லவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

uk_weather_004

Related posts: