பிரித்தானியாவில் மக்கள் கூட்டத்தில் வேன் புகுந்து பயங்கரம் : தீவிரவாத தாக்குதலா?

பிரித்தானியாவில் வான் ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோவின் க்ளைடென்பாக் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது சாலை வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று திடீரென பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு நின்றுக்கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்து வேன் ஓட்டுநர், பள்ளி மாணவன் உட்பட நான்கு பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.விபத்தையடுத்து குறித்த சாலை மூடப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில் வேன் காட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்து நிறுத்தம் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|