பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும் – வர்த்தக அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தின்போது தமது சுய வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும்இ அதற்கானதொரு குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றோம்.கால எல்லை நிர்ணயிக்கப்படுமாயின் நிலைமாற்ற காலம் தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
Related posts:
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு!
நாள்தோறும் போராட தயார்: காங்கிரஸ்!
தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளது - டொனால்ட் ட்ரம...
|
|