பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம்!

Sunday, October 16th, 2016

வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டின் தலைவர்கள், இந்தியாவை குறிப்பாக குறிப்பிட்டு, சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தியா மாநிலம் கோவாவில் நடைபெற்ற மாநாட்டின் இறுதி அறிவிப்பாக சீனா, ரஷியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள், அனைத்து நாடுகளுக்கும் உள்ள, தங்கள் நாட்டின் பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கையை தடுக்கும் பொறுப்பை வலியுறுத்தினர்.

இந்திய ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ளது ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

முன்னதாக சீன அதிபர் ஷி ஜின்பிங், மாநாட்டில், சமீபத்தில் இந்தக்குழுவில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலை பற்றி குறிப்பிட்டார்; இருப்பினும் நீண்ட கால வாய்ப்புகள் நேர்மறையாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

_91943575_gettyimages-615005662

Related posts: