பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பெய்ரூ இராஜினாமா!

Friday, June 23rd, 2017

பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பெய்ரூ தனது ராஜினாமா கடிதத்தை நேற்று (புதன்கிழமை) சமர்பித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர் மரிலே டி சார்னெஸூம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர்களுடைய ராஜினாமா குறித்த தகவல்களை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று மாலை உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜினாமா தீர்மானத்திற்கான காரணத்தை விளக்குவதாகவும் பிரான்சுவா பெய்ரூ தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் கட்சிக் கூட்டணியில் உள்ள ஆழனுநஅ மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த இராணுவ மந்திரியும் பாதுகாப்பு அமைச்சருமான சில்வியே கௌலார்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற நியமனங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய நாடாளுமன்றின் நிதியில் கையாடல் செய்ததாகவும் எதிர்க்கட்சிகளால் இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சில்வியே கௌலார்ட் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்திருந்தார்.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக  ஆழனுநஅ மத்திய வலதுசாரி கட்சி மீது தவறாக நிதி கையாளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வதற்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தீர்மானித்துள்ளதாகவும்  இன்று மாலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: