பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுத் தாக்குதல்!
Friday, June 28th, 2019
துனிசியாவில் அடுத்தடுத்து இரன்டு இடங்களில் தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துனிசியாவில் சார்லஸ் டி கோலே தெருவில் நின்று கொண்டிருந்த பொலிஸ் காரை குறிவைத்து காலை 11 மணியளவில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலே அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் அருகே கார் நிறுத்துமிடத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒரு பொலிஸார் மற்றும் மூன்று பொதுமக்கள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காரை சுற்றிலும் சிதறிக்கிடந்த தற்கொலை குண்டுதாரியின் உடல்பாகங்களை பொலிஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என முதற்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
தெலுங்கானாவில் அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி!
வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? சிறைக்கு செல்லும் அபாயம்!
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளும் சீன ஆய்வுக் கப்பல் - இந்தியா உன்னிப்பாக கவனிப்பு!
|
|
|


