பிரான்ஸ் ஜனாதிபதி – மோடிக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல்!!
Wednesday, September 22nd, 2021
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தொலைபேசி மூலம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், பயங்கரவாதம், பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த விடயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். அத்துடன் ஜி 20 மாநாடு போன்ற பல தரப்பு உச்சி மாநாட்டில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தோ ௲ பசுபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், இந்த விடயத்தில் தற்போதைய நிலையை நீடிக்கவும், இணங்கியுள்ளனர். மேலும், கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருப்பதை பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்றுள்ளார்
Related posts:
சுமாத்ரா தீவில் எரிமலை சீற்றம் - வான்போக்குவரத்திற்கு அபாய எச்சரிக்கை!
பிஜி தீவில் நிலநடுக்கம்!
காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி - அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்கள...
|
|
|


