பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வருகை!

Sunday, March 11th, 2018

ப்ரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தார்.

நாளை ஆரம்பமாகவுள்ள 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பு மாநாட்டில் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி பங்கேற்கிறார்.

அதன்பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி உற்பத்தி ஆலையை ஆரம்பித்து வைக்க உள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பிரான்ஸ்ஸுக்கு இந்தியாவுக்கும் இடையில், இருநாட்டு பொருளாதாரம், அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இதன்போது கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

ப்ரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

முன்னதாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவை இந்தியப் பிரதமர் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்காதமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: