பிரான்ஸ் – கொலம்பியா இடையே உடன்படிக்கை கைச்சாத்து

பிரான்ஸ் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (புதன்கிழமை) பிரான்ஸ் சென்றுள்ள கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மனுவல் சான்ரோஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆகியோருக்கு இடையில் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ‘அமைதிக்கான போராட்டத்தில் சமரசம்இ நீதி அமைதி மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களுக்கான ஆதரவுடன் கொலம்பியா வெற்றிபெறுவதற்கு பிரான்ஸ் உதவி புரியும்’ என்று தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்டையுடன் (குயுசுஊ) சான்ரோஸ் அரசாங்கம் கடந்த ஆண்டு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டது. அதன்பிரகாரம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் தமது ஆயுதங்களை அடுத்தவாரமளவில் ஆயுதக்குழு ஒப்படைக்கவுள்ளது.
இந்நிலையில் கடந்தவார இறுதியில் போகோடாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மனுவல் சான்ரோஸ் ஐக்கியப்பட்ட மற்றும் சுதந்திரமான மக்களின் விருப்பத்தை குண்டுகளால் சிதறடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|