பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளரின் மனைவி மீது விசாரணை!

போலி பணிகளை உருவாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு மத்தியில், பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரான்ஸுவா ஃபியாங்கின் மனைவி அதிகாரபூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஒரு நாள் முழுவதும் பிரான்ஸுவா ஃபியாங்கின் மனைவி பினேலோப் ஃபியாங்கை நீதிபதிகள் விசாரணை செய்தனர். கடந்த மாதத்தில் பினேலோப்பின் கணவரும், பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளருமான பிரான்ஸுவா ஃபியாங் அதிகாரபூர்வ நீதி விசாரணையின் கீழ் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்யாத பணிகளை செய்ததாக போலியாக கணக்கு காட்டி பல ஆயிரம் யூரோக்களை தன் குடும்பத்துக்கு சம்பளமாக கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் பிரான்ஸுவா ஃபியாங் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரான்ஸுவா ஃபியாங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஆஸ்திரேலியவில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
சிரிய குண்டு தாக்குதலில் தாக்குதலில் 30 பேர் பலி!
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோ...
|
|