பிரான்ஸின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு!
Sunday, May 14th, 2017
இமானுவல் மக்ரோன் பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இன்று (14) பதவியேற்றுள்ளார்.இதனை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சென்ற வாரம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மெரின் லீ பென்னை தோற்கடித்து இமானுவல் மக்ரோன் வெற்றி பெற்றார்.பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான Elysee மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் மக்ரோன் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதவியேற்பின் போது அந்த நாட்டு படையினரால் இமானுவல் மெக்ரோனுக்கு 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளன.
Related posts:
டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம்!
கடும் மழை: சிட்னி நகரில் இயல்பு நிலை பாதிப்பு!
நாளுக்கு நாள் வலுக்கும் முறண்பாடு - கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை வெளியேற்றுகின்றது இந்தியா !
|
|
|


