பிராந்திய மாநாட்டிலும் எதிரொலிக்கும் இந்திய – பாகிஸ்தான் பதட்டநிலை!
Saturday, December 3rd, 2016
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராயதந்திர உறவுகளில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை, ஆப்கானிஸ்தானில் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தில் நடைபெறுகின்ற பிராந்திய கூட்டத்திலும் பிரதிபலித்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவின் இதயம் மாநட்டிற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு வருகிறார், பாகிஸ்தான் ராஜிய அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
ஆனால், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்திய படைப்பிரிவுகள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் இந்தியா, பாகிஸ்தானை ராஜிய ரீதியல் தனிமைப்படுத்த முயல்கிறது. பாகிஸ்தானோ இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்து வருகிறது.

Related posts:
உலக போர் உறுதியானதா? - 230,000 அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு!
8 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டமையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம்
ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி!
|
|
|


