பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய ட்ரம்ப்!

Tuesday, November 10th, 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் அமெரிக்காவின் உயர் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக ட்ரம்பிற்கும், எஸ்பருக்கும் இடையில் பகிரங்கமாகவே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

2021 ஜனவரி 20ஆம் திகதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் வரை ட்ரம்ப் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தற்போதைய தலைவரான கிறிஸ்டோபர் மில்லர் உடனடியாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றுள்ளார்.

மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பெண்டகனின் உள்ள பாதுகாப்புத் துறை தலைமையகத்திற்குள் மில்லர் பிரவேசித்துள்ளார்.

முன்னாள் சிறப்புப் படை உறுப்பினரான மில்லர், கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவராவதற்கு முன்னர் ஜனாதிபதி, டிரம்பின் தேசிய பாதுகாப்பு சபையில் பணியாற்றினார்.

இதற்கிடையில் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு எஸ்பர் நன்றி தெரிவித்ததுடன், பென்டகனில் 18 மாத சேவையில் அவர் செய்த சாதனைகள் குறித்துப் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை ஜோ பைடன் அமரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையை டொனால் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாகத் தெரிவித்து வருகிறார்.

Related posts: