பாக்தாத்தின் ஆயுத கிடங்கு வெடிப்பில் 20 பேர் பலி!

Friday, June 8th, 2018

ஈராக்கில் மசூதி அருகே ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து ஆயுத கிடங்காக பயன்படுத்திவந்துள்ளது.

இந்நிலையில் ஆயுத கிடங்கு திடீரென வெடித்து சிதறியுள்ளதால் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் இருந்த ஐந்து வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: