பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரின் சொத்துக்களை முடக்குமாறு பரிந்துரை!

Tuesday, January 8th, 2019

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவரது சொத்துக்களை முடக்க மேல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த காலப்பகுதியினில் 22 ஆயிரம் கோடி ரூபா அளவில் ஊழல் புரிந்தது தொடர்பாக விசாரணையினை மேற்கொள்ள மேல் நீதிமன்றம் விசாரணை குழுவொன்றை ஸ்தாபித்திருந்தது.

அந்த குழுவினர் ஆசிப் அலி சர்தாரி உட்பட பலரை விசாரணைக்கு உட்படுத்தியது.அவர்களின் விசாரணை அறிக்கை மேல் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் அறிக்கையில் ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி மற்றும் சர்தாரி குழுமத்தின் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கு அமைய சர்தாரி பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து தொடர்மாடி கட்டட தொகுதிகள் மற்றும் அமெரிக்கா மற்றும் டுபாயில் உள்ள சொத்துக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: