பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

Sunday, July 24th, 2016

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒருபகுதியாக மாறும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரிப் பயங்கரவாதி பர்கான் வானியை தியாகி என வர்ணிப்பதனை கடுமையாக எச்செரித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்,  வானி ஹிஸ்புல் முஜாகிதீன் என்னும் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் என்பது பாக்கிஸ்தான் பிரதமருக்கு  தெரியாதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தலைவர்கள் காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு குறித்து ஏராளமான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் என சுஷ்மா சுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.காஷ்மீரின் மீது அக்கறை கொண்டுள்ளது போல் காட்டும் பாகிஸ்தான் காஷ்மீரின் நலனுக்காக எந்த வகையிலும் உதவி செய்தது கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து வன்முறையை தூண்டி விடுகிறது எனவும்  ஹபிஸ் சயித் மற்றும் ஐக்கிய நாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு பாக்கிஸ்தான்  ஆதரவு அளித்து வருகிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என பாக்கிஸ்தான பிரதமர் நவாஸ் கனவு காண்கிறார் என கூறியுள்ள சுஷ்மா சுவராஜ் அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவிற்கு சொந்தமானதெனவும் அதனை  பயங்கரவாதிகளின் சொர்க்கமாக மாற்றுவதற்கு இந்தியா ஒருபோதும் இடம் அளிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டு மக்கள் மீது விமானங்கள் மற்றும் ராணுவனத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தும் நாடு இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேச உரிமை கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காட்டசாட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts: