பாகிஸ்தானில் காய்கறி சந்தையில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பரச்சினார் பகுதியின் எட்கா பஜார் என்ற மிகப்பெரிய காய்கறி சந்தையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள பரச்சினார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்கறி சந்தையில் ஏலம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், குறித்த பகுதியில் பாதுகாப்பு அரணை அமைத்துள்ளனர். குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்திருப்பதால், அங்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
இலண்டனில் ஏற்பட்ட தீவிபத்தினால் இருபது பேர் தற்கொலை முயற்சி!
இலங்கை அகதிகள் இருவர் பலி 17 பேர் படுகாயம் - மெசடோனியாவில் சம்பவம்!
இபோலா நோய் - 1600 பேர் பலி!
|
|