பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Balochistan Mastung மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த குண்டு வெடிப்புக்கு இதுவரையில் யாரும் பெறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு தங்களுக்கும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என குறிப்பிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெள்ளை மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி!
கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது - ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
|
|