பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை – அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

பஹ்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதிமுதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அனைவரும் 30 பஹ்ரைன் தினார் செலுத்தி பி.சி.ஆர் பரிசோதனையை பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
இரசாயன கூட பரிசோதனைக்காக கட்டணம் செலுத்துதல் (be aware Bahrain) என்ற விண்ணப்ப படிவத்தின் மூலம் பஹ்ரைன் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கருமபீடத்தின் மூலம் அந் நாட்டின் பணத்தை செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தீயினில் சங்கமமான கவிஞர் முத்துக்குமார்!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அழிவின் விளிம்பில் வடகொரியா: எச்சரிக்கை விடுத்த சீனா!
|
|