பழங்குடி மக்களைக் கௌரவப்படுத்திய கூகுள்!

இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பசுமைப் போராட்டத்தை, கூகுள் நிறுவனம் டூடுல் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.
கூகுள் நிறுவனம், உலகில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகளை தனது டூடுல் பக்கத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய பசுமைப் புரட்சி போராட்டத்தை அங்கீகரித்து டூடுல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மலைவாழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, காடுகளை அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக 1973ஆம் ஆண்டு சிப்கோ இயக்கத்தை சாண்டி பிரசாத் என்பவர் எழுப்பினார்.
இந்த இயக்கம், இயற்கை வளங்களை பாதுகாத்து, காடுகளை அழிக்க முயன்ற நிறுவனங்களுக்கு எதிராக போராடியதுடன், மக்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்து வெற்றி கண்டது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய பசுமைப் புரட்சி போராட்டமாக இது அறியப்பட்டது.
இந்நிலையில், ‘சிப்கோ இயக்கம்’ நடைபெற்று 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக, கூகுள் நிறுவனம் இந்த டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
|
|