பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!
Saturday, December 8th, 2018
இந்தியா – ஜம்மு காஷ்மீரில் பயணிகள் பேருந்தொன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்ததுடன் பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் 11 பேர் பலியானாதுடன் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Related posts:
|
|
|


