பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி!

பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர்.
பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது.
இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உடல் எச்சங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒராண்டு காலமாக பல்மைரா ஐ.எஸ்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலப்பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏராளமான கொலைகளை செய்திருந்தனர்.
உலகப் புகழ் பெற்ற பண்டைய இடிபாடுகள் உள்ள பல்மைரா நகரத்தின் ரோமன் காலத்து திறந்த வெளி அரங்கு ஒன்றில் வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் 25 ஆண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியிருந்தனர்
Related posts:
|
|