பற்றி எரிந்த விமானம்: அதிஷ்டமாக உயிர் தப்பிய பயணிகள்!

Monday, May 6th, 2019

ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று ஓடுதளத்தில் வைத்து தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மர்மேந்ஸ்க் நகருக்கு புறப்பட்டு சென்ற SU1492 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த விமானமானது தரையிறங்க அனுமதி கோரியுள்ளது.

அனுமதி கோரி சில வினாடிகளில் விமானத்தின் ஒருபகுதி கரும்புகையை கக்கியபடி எரிந்துள்ளது. எனினும், விமானம் தீபிடித்த சில நொடிகளுக்கு முன்னர் அதில் இருந்த அனைத்து பயணிகளும் காப்பாற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மொத்தம் 80 பயணிகள் அந்த விமானத்தில் இருந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

Related posts: