பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல்!

ஸ்கொட்லாந்தின் Rosyth எனும் பகுதியில் இருந்து பிரித்தானிய றோயல் கடற்படைக்கு சொந்தமான விமானந்தாங்கிக் கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 பில்லியன் பவுண்கள் செலவில் அமைக்கப்பட்ட குறித்த எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல் தனது கடற்பயணம் குறித்த சோதனையை நடத்தும் பொருட்டே மேற்படி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கப்பலே றோயல் கடற்படைக்கென உருவாக்கப்பட்ட முதலாவது அதி விசாலமான விமானந்தாங்கிக் கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்தமையின் பின்னர் இந்த கப்பலில் சுமார் 1000 கடற்படை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் சுமார் 40 விமானங்களை இந்தக் கப்பல் சுமக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விளாடிமீர் புடினுக்கு எச்சரிக்கை!
அகதிகளை தங்கவைக்க 3000 ஏக்கர் வனத்தை அழிக்கிறது பங்களாதேஷ்!
எவராலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது – சீன ஜனாதிபதி!
|
|