பயங்கரவாத நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்படுவதை  ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் – வங்காளதேசம்!

Wednesday, September 28th, 2016

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதை ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் என்று வங்காளதேசம் கூறிஉள்ளது.

உரி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதற்கு ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து, தனிமைப்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக இந்தியா நேற்று அறிவித்தது. இவ்விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பூடானும் ’சார்க்’ மாநாட்டை புறக்கணித்து விட்டன. உறுப்பு நாடுகள் புறக்கணிப்பை தொடர்ந்து பாகிஸ்தானும் மாநாட்டை ரத்துசெய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வங்காளதேசம் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதை ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது. இந்தியாவிற்கான வங்காளதேச தூதர் சையத் மவுஸ்ஸிம் அலி தனியார் செய்தி சேனலுக்கு அளித்து உள்ள பேட்டியில், ”சார்க் கூட்டமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க மொத்த உறுப்பு நாடுகள் 8-ல் 4 நாடுகள் முடிவு எடுத்து உள்ளது. இது மிகவும் வலுவான செய்தியாகும்.” என்றார்.

வங்காளதேசத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு உதவிசெய்வதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும், ஊடுருவலை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ள சையத் அலி, “பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப் அணுஆயுதத்தை பிரயோகப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தான கூட்டத்தை முன்னெடுக்க முடியும்,” என்று அதிர்ச்சியும் எழுப்பிஉள்ளார்.

”பாகிஸ்தான் பாதுகாப்பு துறை மந்திரியின் அறிக்கையானது, சார்க் மாநாட்டை நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என்பதை காட்டுகிறது.” போர் மற்றும் அணுஆயுத தாக்குதல் குறித்து பேசக்கூடாது. உரி பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு எழுந்து உள்ளது. ஐ.நா. சபையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது, பாகிஸ்தான் ஆதரவை தேடும் நிலையானது ஏற்பட்டு உள்ளது. இப்போது இந்தியா மற்றும் வங்காளதேசம் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றவேண்டிய மற்றும் உறவை துண்டிக்கவேண்டிய நேரமாகும் என்று சையத் அலி கூறிஉள்ளார்.

Untitled-3 copy

Related posts: