பயங்கரவாதிகளுக்கான ஆதரவை கட்டார் உடன் நிறுத்த வேண்டும் – சவுதி

அரபு நாடுகளுடனான உறவை மீள புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாயின், பலஸ்தீன ஹமாஸ் குழு மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கான ஆதரவை உடன் நிறுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கட்டார் கடைப்பிடிக்க வேண்டும் என சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்துள்ளார்.
கட்டார் நெருக்கடி தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ரியாத் மற்றும் அரபு நட்பு நாடுகளுடனான உறவை நிலைநிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டார் நன்கு அறிந்துள்ளது.
கட்டார் நாட்டுடனான தூதரக உறவை ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, யேமன் உள்ளிட்ட நாடுகள் திடீரென துண்டித்தன. மிகுந்த வேதனையுடன் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
கட்டாரை தனிமைப்படுத்தும் இந்த நடவடிக்கையினால் கச்சா எண்ணெய், உலோகங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், உலகளாவிய எரிவாயு சந்தையிலும் பாதிப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|