பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது மனித குலத்திற்கு எதிரானது – பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!
Saturday, October 14th, 2023
பயங்கரவாதம், எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனித குலத்திற்கு எதிரானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் தாயாகவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி-20 என அழைக்கப்படும் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” இந்தியா நிலவில் தரையிறங்கி உள்ளது. அதேபோல், ஜி 20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக பி20 உச்சிமாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது பி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன.
300க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. உலகின் மிகப் பெரிய தேர்தலை இந்தியா நடத்துகிறது
பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது.
பயங்கரவாதக் குழுக்கள் மாற்றுப் பாதையில் மனித நேய அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


