பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள் மீண்டும் புதிய தேடலுக்கு அழைப்பு!

Monday, March 4th, 2024

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்கள், ஞாயிற்றுக்கிழமை புதிய தேடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மன்பதாக 2014 மார்ச் 8 அன்று 239 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 777 ரக எம்எச் 370 (MH370) விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் பயணித்தபோது மர்மமான முறையில் மாயமானது.

அதன் பின்னரான, வரலாற்றில் மிகப்பெரிய விமானத் தேடல் நடவடிக்கைக்கு பின்னரும், மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காணாமல் போன விமானத்தின் 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு நேற்று (03), மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில்,ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு தினத்தை கொண்டாட சுமார் 500 உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடினார்.

இவர்களில் சிலர் சீனாவில் இருந்து வருகை தந்தவர்கள் ஆவர். காணாமல் போன எம்.எச் 370 விமானத்தில் பயணித்த பயணிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் சீனப் பிரஜைகள் ஆவர்.

இந்தியப் பெருங்கடலில் 120,000-சதுர கிலோமீட்டர் (46,000-சதுர மைல்) பரப்பளவில் மூன்று வருட தேடுதலில் விமானத்தின் எந்த தடயமும் கிடைக்கவில்லை, சில குப்பைகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அவுஸ்திரேலிய தலைமையிலான மீட்பு நடவடிக்கை 2017 ஜனவரியில் இடைநிறுத்தப்பட்டது.

ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் 2018 இல் MH370 க்காக ஒரு மீட்பு நடவடிக்கையினை தொடங்கியது, எனினும் பல மாதங்களாகன தேடல் பணிகளுக்கு பின்னர் மீட்பு பணிகள் வெற்றியின்றி நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: